×

தேசிய கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாரட்டு

கரூர், டிச. 28: தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கரூர் மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு சார்பில் 49வது தேசிய அளவிலான 13 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி ஹைதராபாத்தில் கடந்த 16ம்தேதி முதல் 22ம்தேதி வரை நடைபெற்றது.இதில், தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இதில், கரூரைச் சேர்ந்த மாணவி மோனிகா தமிழ்நாடு அணியில் இடம் பெற்று விளையாடி கரூருக்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி தலைமை வகித்தார். தலைவர் கார்த்தி, துணைத்தலைவர் வீர திருப்பதி முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் பெருமாள் வாழ்த்திப் பேசினார். மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். தமிழ்நாடு அணியில் கரூர் மாணவி இடம் பெற்றுள்ளது சிறப்பு.

The post தேசிய கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாரட்டு appeared first on Dinakaran.

Tags : basketball ,Karur ,49th National Under-13 Girls Basketball Tournament ,Basketball Federation of India ,Hyderabad ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்தாட்ட போட்டி டெல்டா கூடைப்பந்தாட்ட அணி முதலிடம்