×

குடும்ப தகராறு காரணமாக இரண்டு பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை

கரூர்: கரூர் பகுதிகளில் குடும்பத் தகராறு காரணமாக வெவ்வேறு பகுதிகளில் இரண்டு பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் புலியூர் பகுதியை சேர்ந்தவர் சத்யா(28). இவர், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இநத சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இதே போல், தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(29). இவர், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனித்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த இந்த பெண், சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குடும்ப தகராறு காரணமாக இரண்டு பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Karur ,Sathya ,Puliyur ,Karur district ,Dinakaran ,
× RELATED பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்...