- உச்ச நீதிமன்றம்
- பஞ்சாப்
- Aryana
- தில்லி
- புது தில்லி
- அபாய் எஸ். ஓஹா
- அசனுதீன் அமனுல்லா
- அகஸ்டின் ஜார்ஜ் மைஷ்
புதுடெல்லி: டெல்லியில் ஆண்டுதோறும் ஏற்படும் காற்று மாசு மற்றும் அதனை கட்டுப்படுத்துவது ஆகியவை தொடர்பான பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா, அசானுதீன் அமனுல்லா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பயிர் எரிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் அதனை தடுக்க எவ்வித கடும் நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் எடுக்கவில்லை. காற்று மாசுவை தடுக்க ஒன்றிய அரசு மற்றும் பஞ்சாப், அரியானா மாநில அரசுகள் எந்தவித துரித நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். வரும் 23ம் தேதி இருமாநில தலைமை செயலாளர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.
The post டெல்லி காற்று மாசு விவகாரத்தில் பஞ்சாப், அரியானாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.