×

திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் வளர் பிறை பிரதோஷம் வழிபாடு

 

திருத்துறைப்பூண்டி, அக். 16: திருத்துறைப் பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் (பெரிய கோயில்) நேற்று வளர் பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பிறவி மருந்தீஸ்வரர், நந்தீஸ்வரருக்கும் 11 விதமான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, பிரதோஷ நாயனார் நந்தீஸ்வரர் சிறப்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு, ஊர் மேன்மைக்காகவும், பக்தர்கள் மேன்மைக்காகவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். சர்வாலய உழவாரப்பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் வளர் பிறை பிரதோஷம் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Varaka Parai ,Thiruthurapoondi Big Temple ,Thirutharapoondi ,Thiruthura Poondi Piravi Darshaneeswarar Temple ,Tiruvarur district ,Thiruthaurapoondi Periyanayaki Udanurai Piravi Darshaeeswarar temple ,big temple ,Varavi Darshaeeswarar ,Nandeeswarar ,
× RELATED போதை பொருட்கள் எதுவும்...