×
Saravana Stores

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு: கனிமொழி எம்பி பங்கேற்பார் என அறிவிப்பு

சென்னை: ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 8ம் தேதி எண்ணப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து கடந்த 11ம் தேதி துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த உமர் அப்துல்லா. அப்போது தனது கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று(புதன்கிழமை) காலை 11:30 மணியளவில் பதவியேற்கிறார். அவருக்கு துணை நிலை கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

தேசிய மாநாடு கட்சியின் உமர் அப்துல்லா 2வது முறையாக அம்மாநில முதல்வராக பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியேற்வு விழாவில் திமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொள்கிறார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, உமர் அப்துல்லாவின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவ்விழாவில் நேரில் கலந்துகொள்ள இயலாது என்று அவரிடம் முதல்வர் தெரிவித்தார். திமுக சார்பில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்பி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று தெரிவித்தார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு: கனிமொழி எம்பி பங்கேற்பார் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Jammu and Kashmir ,Omar Abdullah ,Kanimozhi ,Chennai ,M. K. Stalin ,Jammu and Kashmir National Conference Party ,President ,Farooq Abdullah ,Jammu ,Kashmir ,Dinakaran ,
× RELATED நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்...