- நீடாமங்கலம் பி.டி.ஓ
- நீடாமங்கலம்
- பஞ்சாயத்து யூனியன்
- திருவாரூர் மாவட்டம்
- Neetamangalam
- நீடாமங்கலம் பி.டி.ஓ
- தின மலர்
நீடாமங்கலம், அக்.15: நீடாமங்கலத்தில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணிகளை செயற்பொறியாளர் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டுப்பட்டு வரும் ஒன்றிய அலுவலகத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இளஞ்சேரன் நேற்று ஆய்வு செய்தார். உடன் உதவி செயற்பொறியாளர் ரெங்கராஜன், ஒன்றிய குழு தலைவர் சோம.செந்தமிழ் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) விஜயலட்சுமி, ஒன்றிய உதவி பொறியாளர் வெங்கடேஷ், ஒன்றிய பொறியாளர் சசிரேகா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ரூ.5 கோடி மதிப்பில் நீடாமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சி தனித்தனி அறைகள், ஒன்றியக்குழுத் தலைவர் அறை, ஒன்றிய பொறியாளர் அறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்ட அலுவலகம், ஒன்றிய கூட்ட அறை, அலுவலர்கள் அறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலக அறைகளை செயற்பொறியாளர் இளஞ்சேரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
The post நீடாமங்கலம் 5 கோடியில் பிடிஓ அலுவலக கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.