×

பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் மாநகராட்சியில் குறைதீர் கூட்டம் மேயர் கோரிக்கை மனுக்கள் பெற்றார்

 

திருச்சி, அக்.15: திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.திருச்சி மாநகரகாட்சி கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். அதில் தங்கள் பகுதி சாலை வசதி, தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி, மின் வினியோகம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனர். புகார்களை பெற்றுக்கொண்ட மேயர், மனுக்கள் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மாநகர கமிஷனர் சரவணன், துணை மேயர் திவ்யா, துணை கமிஷனர் பாலு, மண்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், நகர்நல அலுவலர் மணிவண்ணன், செயற்பொறியாளர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் மாநகராட்சியில் குறைதீர் கூட்டம் மேயர் கோரிக்கை மனுக்கள் பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Tiruchi ,People's Grievance Day ,Trichy Corporation ,Mayor ,Anbazhagan ,Dinakaran ,
× RELATED வெள்ளியணை பெரியகுளம் ஏரியில் சீத்த முட்செடிகளை அகற்ற வேண்டும்