×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் 17,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவில் நீடித்தது. இதனால், அங்குள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 6,445 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 17,596 கனஅடியாக அதிகரித்தது.

அதே சமயம், அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு 7,500 கனஅடியில் இருந்து நேற்று காலை 3,500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர்திறப்பை காட்டிலும் வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டுள்ளது. நேற்று முன்தினம் 89.26 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 89.92 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 52.55 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Mettur ,Cauvery ,Okanagan Cauvery ,Paris ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000...