×

நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள நாராயணபுரம் ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கனமழை காரணத்தால் பள்ளிக்கரணை – கோவிலம்பாக்கம் இடையேயுள்ள நாராயணபுரம் ஏரி மற்றும் அதற்கான கால்வாய்களை நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் ஆய்வு செய்தோம்.

கோவிலம்பாக்கம் அம்பேத்கர் சாலை பாலத்தின் அருகே நாம் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கால்வாயின் மேற்கு பக்கத்தில் கரைகள் உயர்த்தப்பட்டு, ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றப்பட்டு உள்ளதை குறிப்பிட்ட அப்பகுதி மக்கள், மழைநீர் தடையின்றி வெளியேற ஏதுவாக கால்வாயின் கிழக்கு பக்கத்திலும் ஆகாயத் தாமரைகளை அகற்றித்தர வேண்டுமென்று நம்மிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கானப் பணிகளை நேற்று மாலை நாம் ஆய்வு செய்த போது, ஆகாயத்தாமரையை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வந்தது.
இந்த சூழலில், மூன்றாவது நாளாக இன்றும் நாராயணபுரம் ஏரிக்கான நீர்வழித்தடமாக உள்ள அக்கால்வாயில் ஆய்வு செய்தோம். இன்றைய தினம் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றப்பட்டு, கால்வாயின் வழியாக நாராயணபுரம் ஏரி நோக்கி மழைநீர் வேகமாக வெளியேறி வருகிறது. இதற்காக இரவு-பகலாக உழைத்தப் பணியாளர்களை நேரில் பாராட்டினார்.

The post நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Akayathamar ,Narayanapuram Lake ,Minister Assistant Secretary ,Stalin ,Deputy Chief ,Udayaniti Stalin ,Chennai Temple ,Minister ,Adyanidhi Stalin ,
× RELATED அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள்...