×

கள்ளநோட்டில் அனுபம் கெர் புகைப்படம்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான அனுபம் கேரை பார்த்தால் ஒரு விதத்தில் மகாத்மா காந்தி போன்று தெரிகிறார் என்பார்கள் இந்தி ரசிகர்கள். இந்நிலையில் குஜராத்தில் கள்ளநோட்டு அடிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளநோட்டு அச்சடிக்கும் இடத்திற்கு போலீசார் சென்று பரிசோதனை செய்தனர். அப்பொழுது ரூ. 1.60 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் சிக்கியது. அந்த நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு பதில் அனுமபம் கேரின் புகைப்படம் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மேலும் Reserve Bank of India என்பதற்கு பதில் Resole Bank Of India என அந்த நோட்டுகளில் இருந்தது. இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜ்தீப் நுகும் கூறியதாவது, ஷாஹித் கபூர் நடிப்பில் வெளியான ஃபார்ஸி வெப்தொடரை பார்த்துவிட்டு இப்படி கள்ளநோட்டு அடித்திருக்கிறார்கள் என்றார். ராஜ் மற்றும் டி.கே. இயக்கிய ஃபார்ஸி தொடரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்நிலையில் அந்த தொடரை பார்த்து கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

முன்னதாக சூரத்தில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கள்ளநோட்டு அடித்து வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். அந்த சம்பவம் நடந்த வேகத்தில் மேலும் ஒரு கள்ளநோட்டு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கள்ளநோட்டில் காந்திக்கு பதிலாக அனுபம் கெர் படம் இருந்தது. தன் புகைப்படம் இருந்தது குறித்த செய்தியை பார்த்து அனுபம் கேர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கள்ளநோட்டு குறித்த செய்தி வீடியோவை எக்ஸ் தளத்தில் போஸ்ட் செய்து அனுபம் கேர் கூறியிருப்பதாவது, ‘500 ரூபாய் நோட்டில் காந்திஜியின் புகைப்படத்திற்கு பதில் என் புகைப்படம்? எதுவும் நடக்கும் போல’ என தெரிவித்துள்ளார்.

The post கள்ளநோட்டில் அனுபம் கெர் புகைப்படம் appeared first on Dinakaran.

Tags : Anupam Kher ,Mumbai ,Bollywood ,Mahatma Gandhi ,Gujarat ,
× RELATED ஆக்ஸிஜன் அளவு குறைந்து மயங்கிய நடிகை: வெளிநாட்டில் நிமோனியா பாதிப்பு