- காரைமலை நகர்
- செங்கல்பட்டு
- தாரைமலைநகர்
- செங்கல்பட்டு மாவட்டம் நரைமலைநகர் பேரூராட்சி
- கரிமலைநகர்
- தின மலர்
செங்கல்பட்டு: மறைமலைநகர் பகுதியில் கையுறை இல்லாமல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளுவதால் நோய்த் தொற்று பரவும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் மறைமலைநகர் 5வது வார்டு நின்னக்கரை பகுதியில் சாலையில் கொட்டப்படும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் நேற்று தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் கையுறையில்லாமல் வெறும் கையிலேயே குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலானது. மறைமலைநகர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு முறையான கையுறை மற்றும் வாகன ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், தற்போது பேரிடர் காலம் என்பதால், இதுபோல் கையுறை இல்லாமல் வேலை பார்த்தால் நோய் தொற்று பரவும் அபாய நிலை உருவாகும் எனவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
The post மறைமலைநகர் பகுதியில் கையுறை இல்லாமல் குப்பை அள்ளும் தூய்மை பணியாளர்கள்: நோய் தொற்று பரவும் என சமூக ஆர்வலர்கள் வேதனை appeared first on Dinakaran.