- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- செங்கல்பட்டு
- கிராமப்புற வளர்ச்சி
- ககன்தீப் சிங் பேடி
- உள்ளூர்ப்
- அரசு
- பொன்னையா
- நெஞ்சல்மடுவு
- திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை
- திம்மாவரம் ஊராட்சி
- காட்டாங்கொளத்தூர்
- தின மலர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாவரம் ஊராட்சியில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள நீஞ்சல்மடுவு பகுதியில் ஊரகவளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை இயக்குநர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அடிக்கடி வெள்ள பாதிப்புக்குள்ளாகும் மகாலட்சுமி நகர் பகுதியில் கால்வாய், மதில்சுவரை மேம்படுத்த வேண்டும், நீஞ்சல் மடுவில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி தண்ணீர் எளிதில் வடியும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்தும் கேட்றிந்தனர். இந்த ஆய்வில் செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் அனாமிகா, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துனை பெருந்தலைவர் இளங்கோவன், திம்மாவரம் ஒன்றிய கவுன்சிலர் அருள்தேவி, ஊராட்சி மன்ற தலைவர் நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post வெள்ளத்தடுப்பு பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.