- செங்கல்பட்டு
- மாவட்ட கலெக்டர்
- அருண்ராஜ்
- வட கிழக்கு பருவமழை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- மதுரை
- செங்கல்பட்டு மாவட்டம்
- கலெக்டர்
- செங்கல்பட்டு அண்ணாநகர்
- வேதாச்சலநகர்
செங்கல்பட்டு: தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், செங்கல்பட்டு அண்ணாநகர், வேதாச்சலநகர், மகாலாட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார்
அப்போது அண்ணாநகர் பகுதியில் கால்வாய்கள் தூர் வாரப்பட்டுதாக என ஆட்சியர் அருண்ராஜ் செங்கல்பட்டு நகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பினார் அதற்க்கு பதில் அளித்த ஆணையர் இன்னும் தூர் வாரப்படவில்லை என ஆட்சிருக்கு பதில் அளித்தார் அப்போது ஆட்சியர் அருண்ராஜ் பருவமழை தொடங்கிவிட்டது எப்போது தூர் வாரும் பணிகளை துவங்க உள்ளனர் என கேள்வி எழுப்பினார் இன்று மாலைக்குள்ளாக அண்ணாநகர் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர் வாரி தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ளை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனர்
ரொட்டி பால், பிஸ்கேட், தண்ணீர், உணவு தங்கும் இடம் என அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதியோர் இல்லங்கள் அரசு தனியார் மருத்துவமனையில் தரை தளத்தில் மழை நீர் செல்லும் இடங்களில் கவனமாக இருக்க அறிவுரை வழங்கியுள்ளோம், செங்கல்பட்டு மாவட்டுத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம் தண்ணீர் தேங்கிய இடங்களில் மோட்டர் பொருத்தி தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம், இந்த பருவ மழையை பொருத்த வரை காவல்துறையினர், தீயனைப்புதுறை, வருவாய்துறை, சுகாதார துறை, மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் தங்கள் கிராமத்தில் தங்கி கவனமுடம் இருக்க உத்தரவிட்டுள்ளதாகவும், பல துறைகள் சேர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் குழுக்கள் அமைத்துள்ளதாக கூறினார் மேலும் மாவட்டம் முழுவதும் 290 இடங்களில் தங்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள முழு வீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்தார்.
The post பருவ மழையை எதிர்கொள்ளை முழு வீச்சில் தயாராக உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி appeared first on Dinakaran.