×

வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

தேனி: பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், பாம்பார்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்தால், அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் களைகட்டும்.

தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிறமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து குளித்து மகிழ்வர். இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீா் வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவோ, அந்தப் பகுதிக்குச் செல்லவோ கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

The post வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Kumbakkari Baru ,Teni ,Kumpakkari Baru ,Peryakulam ,Theni District ,Kumpakkari River ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை..!!