×

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விராலிமலையில் காங்கிரஸ்கட்சியினர் விழிப்புணர்வு பேரணி

 

விராலிமலை, அக்.11: விராலிமலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் கொள்கை மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை விளக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விராலிமலை காளை சிலை அருகே இருந்து தொடங்கிய பேரணி கடைவீதி வழியாக சென்று சோதனைச்சாவடியில் நிறைவடைந்தது. புதுக்கோட்டை முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ புஸ்பராஜ், வடக்கு மாவட்ட காங்கிஸ் தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். புதுக்கோட்டை நகர தலைவர் இப்ராஹீப் பாபு, வழக்கறிஞர் சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு பென்னட் அந்தோணிராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் விராலிமலை ஒன்றிய தலைவர்கள் ஏழுமலை(மேற்கு), சர்தார் குமாரசாமி (கிழக்கு), சட்டையப்பன் (மத்திய), நகர தலைவர் கருப்பண்ணசாமி, பேன்ஸி நாகராஜ், பாலாஜி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னவாசலில் வட்டார தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

The post காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விராலிமலையில் காங்கிரஸ்கட்சியினர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Congress party ,Viralimalai ,Gandhi Jayanti ,Gandhi ,Dinakaran ,
× RELATED சோனியா காந்தியின் பிறப்பு முதல்...