சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகைத் தேர்வு (கணினி வழித் தேர்வு, ஓஎம்ஆர் முறைத் தேர்வு) மற்றும் விரிந்துரைக்கும் வகைத்தேர்வு வருகிற 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை (19, 20ம் தேதி நீங்கலாக) மற்றும் 28.10.2024 முற்பகல் மற்றும் பிற்பகலில் 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. நுழைவுச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு (ஓடிஆர்) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
The post தொழில்நுட்ப பணிகள் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.