×
Saravana Stores

தஞ்சாவூரில் திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே டைடல் நியோ தொழில்நுட்ப பூங்கா, நிறுவனங்களால் நிரம்பியது : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

தஞ்சை :தஞ்சாவூரில் திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே டைடல் நியோ தொழில்நுட்ப பூங்கா, நிறுவனங்களால் நிரம்பியது. தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று முதலமைச்சர் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொலி காட்சி வாயிலாக கடந்த மாதம் இறுதியில் திறந்து வைத்தார். இந்த நிலையில், தஞ்சை டைடல் நியோ தொழில்நுட்ப பூங்கா, நிறுவனங்களால் நிரம்பியுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வளர்ச்சியை கொண்டு சேர்க்கவேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற்று வருகின்றது. தலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்குள் நியோ டைடல்ஸ் பூங்காக்களை கொண்டு வரும் எண்ணத்தை முன்மொழிந்தார், இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆழமாக ஊடுருவி அவரவர் ஊருக்கே வேலை வாய்ப்புகளை கொண்டுவரும் முயற்சியில் அரசு இறங்கியது.டெல்டா பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் கட்டுவது நல்ல பலனை அளிக்காது, காலியாகவே இருக்கும் என பலரும் கூறினார்கள். ஆனால் இன்று, நமது #திராவிட_நாயகன் அவர்கள் டைடல் நியோ கட்டிடத்தை திறந்துவைத்து 15 நாட்களே ஆன நிலையில், ஒட்டுமொத்த 48,444 சதுர அடி வாடகைக்குப் பகிர்ந்த பகுதி முழுவதும் நிறுவனங்களால் நிரம்பியது, “இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தஞ்சாவூரில் திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே டைடல் நியோ தொழில்நுட்ப பூங்கா, நிறுவனங்களால் நிரம்பியது : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tidal Neo Technology Park ,Thanjavur ,Minister DRP ,Raja Perumitham ,Tamil Nadu ,Tidal Parks ,Minister ,D. R. P. Raja Perumitham ,
× RELATED தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்கிய குழந்தைகளுக்கு சான்றிதழ்