- கீழ் பவானி பாசன சபைகள்
- ஈரோடு
- முதலமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- கிளிபவானி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கில்பவானி பாசன சபைகள்
ஈரோடு, அக். 10: கீழ்பவானி பாசன சபைகளுக்கு பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் உடனடியாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பாசன விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திரராசு தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கீழ்பவானி வாய்க்காலில் 44 பாசன சபைகள் உள்ளது.
இந்த சபைகள் விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்படாத சபைகள் ஆகும். கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த சபைகளுக்கு பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. எனவே, விவசாயிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக 44 பாசன சபைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையெனில் 44 சபைகளுக்கும் தனி அலுவலர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். 2007ம் ஆண்டு நீர் மேலாண்மை சட்டத்தின்படி தேர்தல் நடத்த அனைத்து விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கீழ்பவானி பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் appeared first on Dinakaran.