×

பென்னாகரம் அருகே சாலை விபத்தில் மாணவர் பலி

தர்மபுரி, அக்.9: பென்னாகரம் அருகே செங்கலூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சஞ்சய் மூர்த்தி (21). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சஞ்சய் மூர்த்தி தனது டூவீலரில் பென்னாகரம் ஏரியூர் சாலையில் மடம் என்ற பகுதியில் சென்றுள்ளார். அப்போது எதிரே பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராமக்கண்ணன்(30) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் பயங்கரமாக மோதியது. இதில் சஞ்சய் மூர்த்தி, ராமக்கண்ணன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். ராமக்கண்ணன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பென்னாகரம் அருகே சாலை விபத்தில் மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Bennagaram ,Dharmapuri ,Sanjay Murthy ,Annadurai ,Chengalur ,Bennagaram Ariyur Road ,Dinakaran ,
× RELATED குட்கா விற்ற கடைக்கு சீல்