×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்களில் செல்ல 16,000 பேர் முன்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருகிறது. முன்னதாக 13ம் தேதி போகி பண்டிகையும், 15ம் தேதி மாட்டுப்பொங்கல், 16ம் தேதி காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனால் நான்கு நாட்கள் விடுமுறையாக இருக்கிறது. எனவே சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிப்பு, பணி, தொழில் நிமித்தமாக தங்கி இருப்போர், சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினரோடு பண்டிகையை கொண்டாடுவார்கள். இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்த விபரம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜனவரி 11 முதல் 13ம் தேதி சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,797 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,612 பேருந்துகளும் என ஆக மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது. அதன்படி இதுவரை 16,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும்….

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்களில் செல்ல 16,000 பேர் முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : Pongal ,Chennai ,Tamil Nadu ,Bogi ,
× RELATED சுற்றுலா சென்ற போது வாலிபர் திடீர் மரணம்