×

ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மத நல்லிணக்க விழிப்புணர்வு நடைப்பயணம்

 

ஜெயங்கொண்டம், அக்.8: அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக காங்கிரஸ் கட்சியினர் மத நல்லிணக்க விழிப்புணர்வு நடை பயணத்தை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமையில் மத நல்லிணக்க விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முன்னதாக நகர தலைவர் அறிவழகன் வரவேற்று பேசினார். மாநில பொது குழு உறுப்பினர் ராஜசேகரன், செங்குட்டுவன், பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் ராஜேந்திரன் கண்டன உரை நிகழ்த்தினார். நடைபயணk; அண்ணா சிலையில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு காந்தி பூங்காவிற்கு வந்து நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர் கண்ணன், சக்திவேல், பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் விஜய் ஆண்டனி, ஜெயபிரகாஷ். மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடை பயணத்தை தொடர்ந்து காந்தி பூங்காவில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மத நல்லிணக்க விழிப்புணர்வு நடைப்பயணம் appeared first on Dinakaran.

Tags : Religious Harmony Awareness Walk by ,Congress Party ,Jayangkond ,Jayangondam ,Ariyalur District Congress Committee ,Ariyalur District Congress Party ,District President Shankar ,Reconciliation ,Religious Reconciliation Awareness Walk by ,Jayangkonda ,Dinakaran ,
× RELATED சோனியா காந்தியின் பிறப்பு முதல்...