- யூனியன் அரசு
- திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்
- மதுரை
- அஇஅதிமுக
- அமைச்சர்
- யூனியன் ஊராட்சி
- திண்டிகல் ஸ்ரீனிவாசன் பைசல்
மதுரை: மதுரையில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘கலர் கலராக வண்ணம் தீட்டிய ரயில்களை இயக்கி மக்களிடம் பணத்தைச் சுரண்டுகிற அரசாக ஒன்றிய அரசு உள்ளது. 2 ஆயிரம் ரூபாயில் சென்னை சென்ற நிலை மாறி இன்றைக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது. மக்களை சுரண்டுகின்ற, கொள்ளையடிக்கிற ஒரு அரசாக ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஓபிஎஸ் ராம்நாட்டிலும், டிடிவி.தினகரன் தேனியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். இருவருமே ஒன்றுமில்லை. பொதுக் குழுவில் இவர்களை நீக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். அந்தக் கருத்தை ஏற்றுத்தான் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்’’ என்றார்.
* ‘லண்டனுக்கு போன ஆட்டுக்குட்டி’ செல்லூர் ராஜூ கிண்டல்
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘நான் பேசும்போது தலையை தலையை ஆட்டினீர்கள். யாரும் ஆட்டுக்குட்டி போன்று தலையை ஆட்ட வேண்டாம். ஆட்டுக்குட்டி லண்டன் போய்விட்டது. ஜோராக கை தட்டணும்.. சிரிப்பை மகிழ்ச்சியாக கொண்டாடணும்… ஏப்பா நன்றியப்பா… நன்றி.. நன்றியப்பா…’’ என்று நகைச்சுவையாக அண்ணாமலையை மேற்கோள் காட்டி நக்கலடித்தார்.
The post கலர் கலரா ரயிலுக்கு வண்ணம் தீட்டி மக்களிடம் பணத்தை சுரண்டுகிறது ஒன்றிய அரசு: திண்டுக்கல் சீனிவாசன் பாய்ச்சல் appeared first on Dinakaran.