×

புளியங்குடியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி திறப்பு

 

புளியங்குடி,அக்.7: புளியங்குடி 16வது வார்டு அகமது இப்ராஹீம் தெருவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இதில் 16வது வார்டு கவுன்சிலரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச்செயலாளருமான ஷேக் காதர் மைதீன் தலைமை வகித்தார். மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி செயலாளர் அபுதாகிர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாகுல் ஹமீது வரவேற்றார்.

புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தர பாண்டியன் நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். விழாவில் முஸ்லிம் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹீம், நகர துணைத் தலைவர் காஜா மைதீன், சோப்பு முகமது யூசுப், பிஸ்மி முகைதீன், முன்னாள் நகர செயலாளர் ஹபிபுல்லா, பீர் முகமது, நாகூர் மைதீன், பாதுஷா, தவக்கா சாகுல் ஹமீது, திமுக வட்ட செயலாளர் சாகுல் ஹமீது, வட்ட பிரதிநிதி ஹாஜா மைதீன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட விவசாய அணி பொருளாளர் அபுல்ஹசன் சாதலி நன்றி கூறினார்.

The post புளியங்குடியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி திறப்பு appeared first on Dinakaran.

Tags : Puliangudi ,Buliangudi ,Buliangudi 16th Ward Ahmed Ibrahim Street ,16th ,Ward ,Councilor ,Indian Union Muslim League City ,Sheikh Kader Mydeen ,Dinakaran ,
× RELATED புளியங்குடி பவானி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை