- வருமுன் கபோம் மருத்துவ முகாம்
- பள்ளிப்பட்டு
- சந்திரன்
- சட்டமன்ற உறுப்பினர்
- வருணுமுன் கபோம்
- மருத்துவ முகாம்
- கர்லம்பாக்கம் அரசு
- பள்ளிப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம்
பள்ளிப்பட்டு,அக்.4: பள்ளிப்பட்டு அருகே நடைபெற்ற வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை சந்திரன் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கர்லம்பாக்கம் அரசுப்பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை, திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு, இ.சி.ஜி, ஸ்கேன், கண், இருதயம், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஏழுமலை, பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பி.டி.சந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாரதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முரளிசேனா, ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா, ஒன்றிய கவுன்சிலர் பத்மா கோவிந்தராஜ், திமுக நிர்வாகிகள் கோவர்தன் நாயுடு, தேவராஜ், மணி, வராலு நாயுடு, குருநாதன், மீசை வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பொன்னேரி: பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியம் அகரம் ஊராட்சிக்குட்பட்ட தேவம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்துகொண்டார். பின்னர் தேவம்பட்டு பகுதியில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பழுதான கட்டிடத்தை பார்வையிட்டு, அங்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடத்தினை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேவம்பட்டு ஊராட்சி தலைவர் ராஜா, மீஞ்சூர் முன்னாள் பொருளாளர் முனிவேல், ஒன்றிய கவுன்சிலர் அன்பு, அத்திப்பட்டு புருஷோத்தமன், மீஞ்சூர் மேற்கு வட்டாரத் தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், பரசுராமன், காங்கிரஸ் நிர்வாகிகள் வேலு, அமாவாசை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்
The post வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் appeared first on Dinakaran.