- ஜெயங்கொண்டம் ககம்மலையநாதர் கோயில்
- ஜெயங்கொண்டம்
- கோடலிகருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி
- ஜெயங்கொண்டம் காகமலைநாதர் கோவில்
ஜெயங்கொண்டம், அக்.4: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயில் வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர் இம்முகாமிற்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மணிவண்ணன் மாணவர்கள் 25 பேர் கலந்துகொண்டு கோயில் உட்புறமும் வெளிப்புறம் போன்ற இடங்களில் முட்புதர்கள் கருவேல செடிகள் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அகற்றி தூய்மைப்படுத்தினர். தூய்மை பணியின் போது மாவட்ட திட்ட அலுவலர் செல்ல பாண்டியன் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் சிவ தொண்டர்கள் வீரமணி மனோகரன் கழுமலைநாதர் கோயில் , எழுத்தர் கந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயிலில் மாணவர்கள் உழவாரப்பணி appeared first on Dinakaran.