×
Saravana Stores

வடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பேசிய முதல்வர்; முன்னெச்சரிக்கை என்பது இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்துவிடலாம். காலநிலை மாற்றத்தால் வடகிழக்கு பருவமழை சில நாட்களில் மொத்தமாக பெய்துவிடுகிறது. கடந்த காலங்களில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் 3 மாவட்டங்களில் விரைவாக இயல்புநிலை திரும்பியது என்று கூறினார்.

The post வடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Northeast Monsoon ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M. K. Stalin ,North East Monsoon ,Deputy ,Udayanidhi ,Ministers ,Duraimurugan ,KSSRR Ramachandran ,AV Velu ,Shekharbabu ,M.Subramanian ,Thangam Tennarasu ,Dinakaran ,
× RELATED மதுரை மழை, பேரிடர் காலங்களில்...