திருப்போரூர், செப்.30:திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், பாரத் வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவிகளுக்கான வேளாண் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவிகள் அனைவரும் தண்டலம் கிராமத்தில் தங்கி விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் நொச்சி மற்றும் ஆடாதொடா செடிகளை பயிரிட வேண்டியதன் அவசியம் குறித்தும்,
அவற்றின் இலைகளைக் கொண்டு ஐந்திலைக் கரைசல் போன்ற இயற்கை பூச்சிக் கொல்லி விரட்டிகளை தயாரிப்பது எப்படி என்பது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த முகாமின்போது திருப்போரூர் உதவி வேளாண் அலுவலர் கிருபாசங்கரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
The post தண்டலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு வேளாண் விழிப்புணர்வு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.