×

ஏமனுக்கு இஸ்ரேல் பதிலடி

ஜெருசலேம்: ஏமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் அமெரிக்காவில் நடந்த ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தலைநகர் டெல் அவிவ் திரும்பினார். அவரது விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் டெல்அவிவ் நகரில் விமான தாக்குதல் சைரன்கள் ஒலித்ததால் பீதி ஏற்பட்டது.

ஏமனில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அதனை இடைமறித்து அழித்து விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமன் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. ஹெடைடா நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

The post ஏமனுக்கு இஸ்ரேல் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Israel ,Jerusalem ,Yemen ,Netanyahu ,Aina General Assembly ,United States ,Tel Aviv ,
× RELATED ஏமன் விமான நிலையம், துறைமுகங்கள் மீது...