×

பழையகாயல் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

ஆறுமுகநேரி, செப். 29: பழையகாயல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.பழையகாயல் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ராஜேஷ் அடிகளார் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜெனோரிஸ் வரவேற்றார்.நிகழ்ச்சியில் பழையகாயல் பஞ்சாயத்து தலைவர் செல்வக்குமார் கலந்துகொண்டு 35 மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில் உடற்கல்வி ஆசிரியர் வின்ஸ்டன் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பழையகாயல் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Old Kayal School ,Arumuganeri ,Tamil Nadu government ,Old Kayal St. Anthony's Higher Secondary School ,
× RELATED ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம்