×

அயோத்தி கோயில் திறப்புவிழா; ராகுல் விமர்சனத்திற்கு பா.ஜ கடும் கண்டனம்

புதுடெல்லி: அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிய வீடியோவை நேற்று பா.ஜ இணையதளத்தில் ெவளியிட்டது.

அதில் ராகுல்காந்தி ,’ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அமிதாப் பச்சன், அம்பானி மற்றும் அதானி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் யாரும் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை’ என்று பேசியிருந்தார். இதற்கு பா.ஜ கடும் கண்டனம் தெரிவித்தது. பாஜவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறும்போது,’ ராமர் கோயிலை காங்கிரஸ் தொடர்ந்து அவமரியாதை செய்து வருகிறது’ என்றார்.பாஜ செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில்,’ ராகுல்காந்தி உயர்ந்த பொய்யர். அவர் பொய் சொல்வது இது முதல் முறை அல்ல’ என்றார்.

The post அயோத்தி கோயில் திறப்புவிழா; ராகுல் விமர்சனத்திற்கு பா.ஜ கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Ayothi Temple Opening Ceremony ,Rahul ,New Delhi ,Lok Sabha ,Rahul Gandhi ,Ramar Temple ,Ayodhya ,Ja ,RAKULKANTHI ,AMITAB BACHCHAN ,KUMBA ABHISHEKA ,Ayoti Temple Opening Ceremony ,Dinakaran ,
× RELATED அரசுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு...