×

இடைத்தரகர்களால்தான் தொழிலாளர் ஏமாற்றம் புலம்பெயர்வு சட்டத்தை திருத்த மவுனம் சாதித்து வருவதா? மோடி அரசுக்கு பொன்குமார் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் புலம்பெயர்வோர் தினம் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு மாநில அமைப்புச் செயலாளர் எம்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இளைஞரணி டி.சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் பேசியதாவது: புலம்பெயர்வில் இடைத்தரகர்கள் தான் தொழிலாளர்களை பெருமளவு ஏமாற்றுகின்றனர். புலம்பெயர்வு சட்டத்தை உடனடியாக திருத்த வேண்டும் என தொடர்ந்து பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசு மௌனம் சாதித்து வருகிறது. இது கண்டனத்திற்கு உரியதாகும். எனவே சப் ஏஜெண்டுகளையும் உள்ளடக்கிய அதாவது அவர்கள் தவறு செய்தால் அவர்களையும் கைது செய்யக்கூடிய அளவிற்கு புதிய புலம்பெயர்வு சட்டத்தை கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தலைவர் பொன்குமார் அவர்கள் பேசினார்.நிகழ்ச்சியில் எம்எல்ஏ எம்.பிரபாகரன், மனைத் தொழில் கூட்டமைப்பின் பொருளாளர் எஸ்.ஜெகதீசன், இணைச் செயலாளர்கள் பி.சிவக்குமார், சி.ராஜாராம், ஜெகமுருகன், இணைப் பொதுச் செயலாளர் எஸ்.இந்துமதி, அமைப்புச் செயலாளர் ஏ.ஜெ.நாகராஜ்் கலந்து கொண்டனர்.

The post இடைத்தரகர்களால்தான் தொழிலாளர் ஏமாற்றம் புலம்பெயர்வு சட்டத்தை திருத்த மவுனம் சாதித்து வருவதா? மோடி அரசுக்கு பொன்குமார் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Ponkumar ,Modi ,Chennai ,Migrants Day ,Tamil Nadu Farmers Workers Party ,Secretary of State ,M. ,Youngarani D. SARAVAN WELCOMED ,Tamil Nadu Construction Workers' Welfare Board ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி – ராகுல் காந்தி சந்திப்பு