×

அரசுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு சலுகையால் வரலாறு காணாத வர்த்தக பற்றாக்குறை: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிடுகையில், நியாயமான வணிகங்களை விட தங்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போது என்ன நடக்குமோ அது தற்போது நிகழ்ந்துள்ளது. விளைவு: பலவீனமான உற்பத்தி துறை,கரன்சியின் மதிப்பு குறைதல், அதிக வர்த்தக பற்றாக்குறை, அதிக வட்டி விகிதங்கள்,நுகர்வில் வீழ்ச்சி மற்றும் உயரும் பணவீக்கம் ஆகியவை ஏற்படும். அக்டோபரில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்த பின்னர் நவம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 4.85 சதவீதம் குறைந்து 32.11 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் தங்கத்தின் இறக்குமதி திடீரென உயர்ந்ததால் வர்த்தக பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவான 37.84 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

The post அரசுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு சலுகையால் வரலாறு காணாத வர்த்தக பற்றாக்குறை: ராகுல் காந்தி கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,New Delhi ,X site ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு...