×

சைவ வேத ஆகம பகுதி நேர பயிற்சி

சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சைவ வேத ஆகம பகுதி நேர பாடசாலை 3 ஆண்டு பயிற்சி வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் 13 வயது நிரம்பியவராகவும், 20 வயதிற்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். பயிற்சி காலம் 3 ஆண்டுகள். இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை படிவங்களை கோயில் அலுவலகத்திலும், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர்  திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-600 004. கடைசி நாள் 15.1.2022….

The post சைவ வேத ஆகம பகுதி நேர பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Saiva ,Chennai ,Mylapore ,Kapaleeswarar Temple ,
× RELATED கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில்...