திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க மாவட்ட தலைவர் திவ்யா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெண்ணிலா, மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏ.மணிகண்டன், சந்திரமோகன், மாவட்ட பொருளாளர் ப.மணிகண்டன், பூந்தமல்லி வட்டக்கிளை தலைவர் சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர் சங்க தலைவர் இளங்கோ கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஃப்ஆர்டிஏ சட்டத்தை ரத்து செய்து, இபிஎஸ்ல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மாநில அரசர்களுக்கு திருப்பித் தருமாறு நிதி மேலாளர்களுக்கு உத்தரவிடவும், பொதுத்துறை, அரசு துறைகளை குறைப்பதை மற்றும் தனியார் மையப்படுத்துவதை உடனே நிறுத்திட கோரியும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்திட கோரியும்,
அரசின் கண்காணிப்பில் விரிவான கட்டணமில்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை அனைத்து அரசு ஊழியர்கள் ஓய்வு ஊதியர்கள், ஒப்பந்த தினக்கூலி ஊழியர்களுக்கு உத்தரவாதப்படுத்த கோரியும், தேசியக் கல்விக் கொள்கையை கைவிட கோரியும், வருமான வரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்திட கோரியும், ஒன்றிய, மாநில அரசுகளின் உறவுகளை மறுவரையறை செய்திடவும், கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாத்திட கோரியும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
The post அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.