×

தெலங்கானா அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை


திருமலை: தெலங்கானா அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசில் வருவாய் துறை, வீடு மற்றும் செய்தி மக்கள் துறை அமைச்சராக இருப்பவர் பொங்குலேடி னிவாஸ் ரெட்டி. அவரது மகன் ஹர்ஷா ரெட்டிக்கு சென்னை துறைமுகம் மூலம் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் உட்பட ₹100 கோடி மதிப்பிலான பொருட்கள் கடத்தப்பட்டதில் தொடர்பு இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர்.

இதில் பணமோசடி உள்ளிட்ட மற்றொரு வழக்கை பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொண்டது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து ஐதராபாத் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் னிவாஸ் ரெட்டி வீடு உட்பட 15 இடங்களில் நேற்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கூட தகவல் அளிக்காமல் டெல்லியில் இருந்து அதிகாரிகள் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தெலங்கானா அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,Telangana ,Tirumala ,Ponguledi Nivas Reddy ,Minister of Revenue, Housing and Information People ,Congress government ,Chief Minister ,Revanth Reddy ,minister ,
× RELATED ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள்...