×

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி


பெங்களூரு: தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் (ஜேஎஸ்பி) அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜ தேசிய தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கோரியிருந்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த 42வது ஏசிஎம்எம் நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு திலக் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது.

The post தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Union ,Finance ,Minister ,Nirmala Sitharaman ,Bengaluru Special Court ,Bengaluru ,42nd ,ACMM Court ,Union Finance Minister ,Nirmala ,Dinakaran ,
× RELATED வரி பத்தியெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க…சொல்கிறார் நிர்மலா