×

நடிகர் மோகன்பாபு வீட்டில் திருடிய உதவியாளர் கைது

திருமலை: நடிகர் மோகன்பாபு வீட்டில் ரூ.10 லட்சம் திருடிய உதவியாளரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஜல்பல்லியில் உள்ள மஞ்சு டவுன்ஷிப் பகுதியில் நடிகர் மோகன்பாபு வசித்து வருகிறார். கடந்த 22ம் தேதி ரூ.10 லட்சத்தை லாக்கரில் வைத்துள்ளார். மறுநாள் பார்த்தபோது பணம் மாயமானதாம். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மோகன்பாபுவிடம் பணிபுரியும் உதவியாளர் கணேஷ்நாயக் என்பவர் பணத்தை திருடியது தெரிந்தது. திருப்பதியில் பதுங்கியிருந்த கணேஷ்நாயக்கை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.7.36 லட்சம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post நடிகர் மோகன்பாபு வீட்டில் திருடிய உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Mohanbabu ,Tirumala ,Manju Township ,Jalpally, Rangareddy District, Telangana ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்...