×

அன்னூர் அருகே பயணியாக சென்று ஆட்டோ டிரைவரிடம் கொள்ளை; 4 பேர் கைது

அன்னூர், செப்.27: கோவை மாவட்டம், அன்னூரை சேர்ந்தவர் பூபதி. ஆட்டோ டிரைவரான இவரிடம் நேற்று காலை கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெர்மன் ராகேஷ் (24), நந்தகுமார் (21), சந்தோஷ் (25), ராகுல் (19) ஆகிய 4 பேரும் கோவில்பாளையம் செல்ல வேண்டும் என்று அன்னூரில் ஆட்டோவில் ஏறி உள்ளனர். எல்லப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது இடையில் நிற்க வேண்டும் என ராகேஷ் கூறியுள்ளார். ஆட்டோவை நிறுத்திய பூபதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். அப்போது ஆட்டோ டிரைவர் பூபதி கூச்சலிட்டார்.

இதனையடுத்து பகுதியில் இருந்து பொதுமக்கள் 4 பேரையும் துரத்தினர். அதில் ராகேஷ் கீழே விழுந்து அவரது கால் முறிந்தது. மற்ற மூவரும் தப்பிச்சென்றனர். ஜெர்மன் ராகேஷை பிடித்து அன்னூர் போலீசிடம் ஒப்படைத்தனர்.  போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சந்தோஷை கைது செய்தனர். விசாரணையில் ஜெர்மன் ராகேஷ் மீது பலாத்காரம், அடிதடி உட்பட 8 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இருவரையும் அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த நந்தகுமார், ராகுலை அன்னூர் போலீசார் தனிப்படை கொண்டு உடனே கைது செய்தனர்.

The post அன்னூர் அருகே பயணியாக சென்று ஆட்டோ டிரைவரிடம் கொள்ளை; 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Annoor ,Annur ,Bhupathi ,Coimbatore ,Rakesh ,Nandakumar ,Santhosh ,Rahul ,Kovilpalayam ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கடல்நீரை வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?