×

அரியவகை மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு முதல்வரின் தனிப்பிரிவுக்கு தபால் அனுப்பும் போராட்டம்

நித்திரவிளை, செப். 27: குமரி மேற்கு மாவட்டத்தில் ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அரிய வகை மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்தூர் மண்டல பகுதியில் உள்ள மீனவர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு வகையான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பூத்துறை தபால் அலுவலகத்தில் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் அருளானந்தன் தலைமையில் 200க்கும் அதிகமான மீனவர்கள் திரண்டனர். அவர்கள் முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

The post அரியவகை மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு முதல்வரின் தனிப்பிரிவுக்கு தபால் அனுப்பும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nidravila ,Tuthur Zone ,Varvara ,Sevdesam ,Kolangod ,Kumari West district ,Dinakaran ,
× RELATED நெற்பயிர் பாதுகாப்பு குறித்து வேளாண் துறை விளக்கம்