- தேசிய ஊட்டச்சத்து மாத விழா
- காஞ்சிபுரம்
- காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கீஜம்பி
- காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- நிரல்
- ஒருங்கிணைந்த குழந்தை
- தேசிய ஊட்டச்சத்து மாத விழா வினாடிவினா
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த, தேசிய ஊட்டச்சத்து மாத விழா, வினாடி – வினா போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் (காஞ்சிபுரம்- கிராமப்புறம் வட்டாரம்) சார்பில், போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நேற்று முன்தினம் கல்லூரியின் கருத்தரங்கில் நடந்தது.கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் வீரராகவன், பொருளாளர் மல்லிகா மாதவன் மற்றும் காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கு.வெங்கடேசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக வட்டார மருத்துவர் அருள்மொழி, ஊட்டச்சத்து நிபுணர் வி.பாரதி ஆகியோர் கலந்துகொண்டு, வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினர்.
மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், பல்வேறு ஆரோக்கிய ஊட்டச்சத்து உணவுகளின் கண்காட்சியும் செயல்முறையுடன் விளக்கப்பட்டது. இவ்விழாவில், மாணவிகளுக்கு ரங்கோலி போட்டி, மெகந்தி போட்டி, வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் சிறப்பாக செயலாற்றிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா, கிராமப்புறம் ஒருங்கிணைந்த வட்டார ஒருங்கிணைப்பாளர் ஷைனி, துணை முதல்வர் பிரகாஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கார்த்திகா, வீரராகவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
The post தேசிய ஊட்டச்சத்து மாத விழா வினாடி – வினா போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ் appeared first on Dinakaran.