பாரிஸ்: ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் 1 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது கடந்த 2 ஆண்டுகளில், இல்லாத வகையில் ஏற்பட்ட அதிக பாதிப்பாகும். இந்த பாதிப்பு ஜனவரி 2வது வாரத்தில் இன்னும் அதிகரிக்க கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் அரசை எச்சரித்துள்ளனர்.இதனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது அமைச்சரவை சகாக்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். எனவே, ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் புதிய விதிகளை பிரான்ஸ் அரசு விரைவில் அறிவிக்க உள்ளது….
The post பிரான்சில் அதிவேகம்: ஒரு லட்சம் பேருக்கு ஒமிக்ரான் தொற்று appeared first on Dinakaran.
