×
Saravana Stores

‘விரைவில் குப்பைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும்’

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தமிழ்நாடு கவினாடு கண்மாயில் பனை விதை மரங்களை நடும் பணியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் 249 இடங்களில் குப்பை கிடங்குகள் உள்ளது. இதில் 148 இடங்களில் முழுமையாக பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்பட்டு உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளது. குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 200 கோடி ரூபாய்க்கான உயர்நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விரைவில் மற்ற இடங்களில் பணிகள் முடிந்து முழுமையாக குப்பைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘விரைவில் குப்பைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும்’ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pudukottai ,Ministers ,Raghupathi ,Meiyanathan ,Pudukottai, Tamil Nadu ,Kavinadu ,Minister ,Tamil ,
× RELATED கெஞ்சி பதவி வாங்கிய எடப்பாடி சவால்...