சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7% ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்கிற இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடந்தது. பேரணிக்கு எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.சபீக் அஹம்மது, முகம்மது ரஷீத், பஷீர் சுல்தான், அஸ்கர் அலி, ரவிச்சந்திரன், சென்னை வடக்கு மண்டல செயலாளர் முகமது இஸ்மாயில், சென்னை மண்டல மாவட்ட தலைவர்கள் ஜூனைத் அன்சாரி, சலீம் ஜாபர், பூட்டோ மைதீன், சீனி முகம்மது, அப்துல் ரசாக், முகமது பிலால், செய்யது அஹமது, வழ.நவ்பில், ஆர்.எம்.கே.மாலிக், ஜூபைர் அலி, ஜாபர் ஷெரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்றார். மாநில செயலாளர் ரத்தினம் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, அபுபக்கர் சித்தீக், நஜ்மா பேகம், பொருளாளர் அமீர் ஹம்ஸா மாநில செயலாளர் ஏ.கே.கரீம் சிறப்புரையாற்றினர்.
பேரணியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தியாகு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தவத்திரு திருவடிக்குடில் அடிகளார், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் எம்.ராஜேஸ்வரி பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
The post முஸ்லிம்களுக்கு 7% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சி பேரணி appeared first on Dinakaran.