- மத்திய அமைச்சர்
- பயணிகள் சங்கம்
- முருகன்
- கல்லிதைக்குரிச்சி ரயில்வே பயணிகள் சங்கம்
- கவிஞர் உமர் பருக்
- ஜான் பால் விக்ல்ஸ் வொர்த்
- நிர்வாகி
- கார்த்திக்
- கல்லிடகுரிச்சி ரயில் நிலையம்
- தின மலர்
அம்பை செப்.26: கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் தரம் உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகனிடம் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் சங்கத்தலைவர் கவிஞர் உமர் பாரூக், ஆலோசகர் ஜான் பால் விக்கிள்ஸ் வொர்த், நிர்வாகி கார்த்திக் ஆகியோர் நெல்லையில் ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து அளித்த மனுவில், ‘கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையை 24 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு நீளப்படுத்த வேண்டும். அனைத்து விரைவு ரயில்களைப் போன்று பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் பாலருவி விரைவு ரயிலும் நின்று செல்ல வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது மாவட்ட பாஜ தலைவர் தயா சங்கர் உடனிருந்தார்.
The post கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் appeared first on Dinakaran.