×

பொன்னமராவதியில் எச்.ராஜா மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்

 

பொன்னமராவதி,செப்.25: இந்தியாவின் எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி பொன்னமராவதி மற்றும் காரையூர் காவல்நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். எச்.ராஜா மற்றும் சில வட மாநில தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி எதிராக கடும் விமர்சனங்களையும், கொலை மிரட்டல் செய்யும் வகையிலும் பேசியதைக்கண்டித்து நாடு முழுவதும் காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனுக்களை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பொன்னமராவதி வட்டார காங்கிரஸ் தலைவர் கிரிதரன் தலைமையில் நகர தலைவர் பழனியப்பன் முன்னிலையில் நிர்வாகிகள் ஜீவானந்தம், சோலையப்பன், நாட்டுக்கல் ராஜேந்திரன், சுப்பையா, கோவிந்தராஜ், பாலுச்சாமி மற்றும் பலர் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் பத்மாவிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதே போல காரையூர் வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் காமராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பசீர் அகமது, அப்பாஸ், வட்டார செயலாளர் அடைக்கன் உட்பட பலர் கலந்துகொண்டு பாஜ கட்சி தலைவர்களுக்கு எதிரான புகார் மனுக்களை காரையூர் சப்.இன்ஸ்பெக்டர் அருணகிரியிடம் வழங்கினர்,

The post பொன்னமராவதியில் எச்.ராஜா மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Congress party ,H.Raja ,Ponnamaravati ,Karaiyur ,H. Raja ,India ,Rahul Gandhi ,Ponnamaravathi ,
× RELATED சோனியா காந்தியின் பிறப்பு முதல்...