×

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை?

 

தேவகோட்டை, செப்.24: தேவகோட்டையில் கண்டதேவி சாலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தையில் தேவகோட்டையைச் சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிக அளவில், காய்கறிகள், பழங்கள், மீன், கருவாடு மற்றும் பல வகையான உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

நேற்று முன்தினம், வாரச்சந்தையில் உள்ள கடையில், நித்தியகல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் மீன்களை வாங்கியுள்ளார். அதனை சமைத்து சாப்பிட்டதில் அவரது குடும்பத்தினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் தேவகோட்டை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மீன் கடைகளில் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை? appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Kanda Devi Road ,
× RELATED இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்