×

சென்னையில் சீதாராம் யெச்சூரி உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் சீதாராம் யெச்சூரி உருவப் படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காமராஜர் அரங்கில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சீதாராம் யெச்சூரியின் உருவப்படம் திறக்கப்பட்டது. மேலும் “தோழர் சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் சொந்தமானவர், இந்தியாவின் கருத்தியலின் அடையாளமாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது சீதாராம் யெச்சூரிதான், ஜே.என்.யூ. முழுவதுமாக மார்க்சிஸ்ட் கோட்டையாக மாற்றிய பெருமை யெச்சூரியையே சேரும்” என யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

The post சென்னையில் சீதாராம் யெச்சூரி உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : MINISTER ,MUHAMMAD ,SIDARAM ,CHENNAI ,K. Stalin ,Chief Minister ,Floridhi ,MLA ,Sitaram ,Thravidar Corporation ,K. Veeramani ,Secretary General ,Wiko ,Malarduvi ,Sitaram Yechuri ,Kamarajar Arena ,Chief Minister MLA K. Stalin ,
× RELATED இருதரப்பு மோதலில் 7 பேர் மீது வழக்கு