×

இருதரப்பு மோதலில் 7 பேர் மீது வழக்கு

கீழக்கரை, டிச.5: கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த தாஹிர் உசேன் மகன் முஹமது சுபைதீன்(30). கீழக்கரை சேரன் தெரு சதக்கத்துல்லா மகன் முஹமது நபில். இவர்கள் இருவரும் கடந்த 2022ம் ஆண்டு கீழக்கரை வடக்குத் தெருவில் டூர்ஸ்-டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இதில் வரவு செலவு கணக்குகனை பார்ப்பதில் கடந்த செப்.26ம் தேதி மோதல் ஏற்பட்டது.போலீசில் இருதரப்பும் அளித்த புகாரின் பேரில், முஹமது நபீல் மற்றும் முஹமது சுபைதீன் தரப்பை சேர்ந்த 7 பேர் மீது கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இருதரப்பு மோதலில் 7 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Keezakarai ,Muhammad Subaidin ,Tahir Hussain ,North Street, Keezakarai ,Lower Cheran Street ,Satakatullah ,Muhammad Nabil ,Geezakara North Street.… ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் அருகே பாம்பு கடித்து...