×

மது பாட்டில்கள் பறிமுதல்

போடி, செப். 21: தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போடி அருகே விசுவாசபுரம் கிழக்குத்தெரு பகுதியில் சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (68), விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரிடமிருந்த 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், சுந்தர்ராஜை கைது செய்தனர். போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் போடி கிழக்கு வெளி வீதியை சேர்ந்த செல்வம் (63) என்பவர் அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மது பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Theni district ,Bodi taluka police station ,SI Vijay ,East Street ,Visyapuram ,Bodi, Sundarraj ,68 ,Dinakaran ,
× RELATED ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி...