×

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி

சிவகாசி, செப்.21: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜெகதீசன் தலைமை வகித்தார். பயிற்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மினி மற்றும் அனைத்து சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். உணவு பாதுகாப்பு பரிந்துரைகள், சுகாதாரமான முறையில் உணவு சமைப்பது, உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்குவது, தீ விபத்து ஏற்படாத வகையில் பணிபுரிவது உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

The post சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sivakasi Panchayat ,District Collector ,Jagatheesan ,Sathunavu ,Dinakaran ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட்